சென்னையில் 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் அத்தையும் உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலூரில் வசித்து வருகிறார். அவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். அந்தப் பெண் தனது முதல் கணவரைப் பிரிந்து இரண்டாவதாகத் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், சிறுமியின் முதல் கணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரைப் பார்த்துக்கொள்ளச் சிறுமி 2021ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, சிறுமி பகுதி நேர வேலை தேடி வந்ததாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், சிறுமியின் அத்தை, துணி எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஈ.சி.ஆர். பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல்
அந்த வீட்டில் வைத்து அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீ (எ) ஸ்ரீகண்டன் என்பவர், சிறுமியை மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பயந்த சிறுமி யாரிடமும் இதுபற்றி சொல்லாமல் இருந்துள்ளார்.
சமீபத்தில், சிறுமியின் பாட்டியின் துக்க நிகழ்வுக்குச் சிறுமி வந்தபோது, அவரது அத்தை சொத்துக்காக வந்தாயா என்று சண்டையிட்டுள்ளார். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை வீடியோவாக வைத்திருப்பதாகவும், அதை வெளியில் பரப்பி விடுவதாகவும் கூறிச் சிறுமியை மிரட்டியுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்துள்ளார். புகாரின் பேரில், தி.நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் அத்தை மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் ஸ்ரீகண்டன் (எ) கோடம்பாக்கம் ஸ்ரீ ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ மீது ஏற்கனவே தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பு செய்த வழக்கு உட்படப் பல வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின் அத்தையின் செல்போனைப் போலீசார் பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். வீடியோவில் வேறு யாரேனும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.