தமிழ்நாடு

போலீஸ் முன்னிலையில் அரிவாள் வெட்டு...மற்றொரு போலீஸ்காரரால் உயிர்தப்பிய நபர்

அரிவாளுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் முன்னிலையில் அரிவாள் வெட்டு...மற்றொரு போலீஸ்காரரால் உயிர்தப்பிய நபர்
அரிவாள் வெட்டு

பூந்தமல்லி அடுத்த குமரன்சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இந்த குடியிருப்பு வளாகத்தில் கத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஒருவரை வெட்டுவதற்கு விரட்டிச் செல்வதாக அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், போக்குவரத்து காவலர் லோகேஸ்வரன் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது உள்ளே இருந்து ஓடி வந்த நபரை பின்தொடர்ந்து வந்த நபர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கையின் மணிக்கட்டில் வெட்டியதில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

வெட்டிய நபர் கைது

இதையடுத்து, மீண்டும் வெட்ட வந்தநிலையில் அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரை கீழே தள்ளி மடக்கி பிடித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெட்டுக்காயம் அடைந்த நபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வெட்டிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் வெட்டப்பட்ட நபர் பூந்தமல்லி அடுத்த நூம்பலை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும் அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் ஏற்கனவே தகராறு இருந்து வந்த நிலையில், அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் சமரசம் செய்து வைத்ததாகவும், இன்று நேரில் பார்த்தபோது அவரை கத்தியால் வெட்டியதும் தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

உரிய நேரத்தில் போலீசார் அங்கு சென்று தடுக்கவில்லை என்றால், இந்த சம்பவம் கொலையில் முடிந்திருக்கும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.