தமிழ்நாடு

ஹெல்மேட் போட்டால் ஜூஸ்...இல்லையென்றால் கேஸ்...அதிரடி காட்டிய தஞ்சை போலீஸ்

போக்குவரத்து காவலர்களுடன், தனியார் அறக்கட்டளை இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஹெல்மேட் போட்டால் ஜூஸ்...இல்லையென்றால் கேஸ்...அதிரடி காட்டிய தஞ்சை போலீஸ்
ஹெல்மேட் அணிந்தவர்களுக்கு குளிர்பானம் வழங்கிய தஞ்சை போலீஸ்

தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வந்தால் ஜூஸ், இல்லையென்றால் கேஸ் என நூதன முறையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து காவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

Read more: கடலோர மக்களுக்காக குரல் கொடுத்த ரஜினிகாந்த்...வீடியோ வெளியிட காரணம் இதுதானா...

இதேபோல் இன்று போக்குவரத்து காவலர்களுடன், தனியார் அறக்கட்டளை இணைந்து தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குளிர்ச்சி பானங்கள் வழங்கல்

தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பாதம் கீர், ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்ச்சி பானங்கள் வெயிலுக்கு இதமாக வழங்கப்பட்டது.  அதே நேரத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து காவல்துறையினர் எடுத்துரைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு இதேபோல் தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி இது போன்ற முன்னெடுப்புகளை தஞ்சாவூர் போக்குவரத்து போலீசாரும், தனியார் அறக்கட்டளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.