நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மிகக் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று ஒரு நாள் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், கன்னியாகுமரி, மதுரை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காகத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, இன்று ஒரு நாள் மட்டும் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அவசர உதவி தேவைப்பட்டால், அவசரகாலக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் பிற எண்களான 0423-2450034, 0423-2450035 ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.