சென்னையை சேர்ந்த ஒருவர் கார் ஓட்டுனராகப் பணியாற்றிக் கொண்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் கையாண்டு வருகிறார். இந்த நிலையில் ஜிபே ஸ்கேம் ஒன்று நடைபெறுவதாக வீடியோ ஆதாரத்துடன் கார் டிரைவர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் ஸ்கைவாக் அருகே காரை நிறுத்தி உள்ளே அமர்ந்திருந்தபோது, அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவசரமாக 200 ரூபாய் கையில் வேண்டும் எனவும் தான் உடனடியாக ஜிபே மூலமாக அந்தத் தொகையை அனுப்பி விடுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய கார் ஓட்டுநர் பர்ஸை திறந்து இருநூறு ரூபாய் எடுத்தபோது பர்ஸில் 500 ரூபாய் இருந்ததை பார்த்து, அந்த நம்பர் 500 ரூபாய் வேண்டும் 530 ரூபாயாக அனுப்பி விடுவதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர் பணத்தை எடுத்து அந்த வாலிபரிடம் ஓட்டுனர் கொடுத்த நிலையில், அந்த வாலிபர் ஜிபே (Gpay) மூலமாக 530 ரூபாய் பணம் அனுப்பி விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் கார் ஓட்டுநருக்குப் பணம் வராததால் மீண்டும் கேட்டபோது பணம் அனுப்பி விட்டதாகக் கூறிய நிலையில், ஏமாற்றுவதை அறிந்த கார் ஓட்டுநர் செல்போனை எடுத்தபோது அந்த வாலிபர் அண்ணனிடம் வாங்கித் தருவதாகக் கூறி தப்பி ஓடியுள்ளார்.
இது போன்ற மோசடியில் யாரு ஏமாற வேண்டாம் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். மேலும் இதே போன்ற மோசடியில் பலர் சிக்கி இருப்பதாகவும் கூறி பலர் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.