தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு.... சோகத்தில் நகைப் பிரியர்கள்.. எப்போது குறையும்?

குறைவது போல் குறைந்து தற்போது மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது குடும்பத் தலைவிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு.... சோகத்தில் நகைப் பிரியர்கள்.. எப்போது குறையும்?
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு

பெண்களின் தாய் வீட்டு சீதனத்திலேயே மிகச்சிறந்த சீதனம் தங்கம்தான். புகுந்த வீட்டிற்கு போகும் மகளுக்கு பெற்றவர்கள் போட்டு அனுப்பும் தங்கம் மகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல தலைமுறைக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதனால்தான் மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக தங்க நகைகளை சேமிக்கத் தொடங்குகின்றனர். இப்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது என்றாலும் தங்கத்தை வாங்கும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 53 ஆயிரம் ரூபாயை எட்டிய நிலையில் தங்கம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்த தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை எட்டியது.  அட்சய திருதியை கொண்டாடப்பட்ட மே மாதத்தில் 56 ஆயிரம் ரூபாயை கடந்தது தங்கம் விலை. பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் 53 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் நகை கவுரவம்

உலக தங்கச்சந்தையில் இந்தியாவிற்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. தென் மாநில திருமணங்களில் மணமகளும், மணமகனும் அணிவதற்காகவே தங்க நகைகளை வாங்குகின்றனர். தமிழ்நாட்டில் ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் தவிர பிற மாதங்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதற்காக சவரன் சவரனாக தங்கம் வாங்குகின்றனர். இப்போது ஆடி மாதத்தில் தங்கம் விலை இறங்கியதால் பலரும் தங்கம் வாங்கினர். ஆவணி மாதம் பிறந்ததால் தங்கம் விலை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது. 

மேலும் படிக்க: Me Too ஒரு பெண்ணாகவும் தாயாகவும் எனது மனம் பதறுகிறது... நடிகை குஷ்பு

தாய் வீட்டு சீதனம் தங்கம்

தாய் வீட்டு சீதனமாக மணமகளுக்கு திருமணத்தின் போது கொடுக்கப்படுகிறது. தங்கம் செல்வத்தை கொடுக்கும். பாதுகாப்பை கொடுக்கும். இது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. ஆண் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கும் பெற்றோர்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சீதனமாக தங்கத்தை கொடுத்து அனுப்புகின்றனர். இந்திய தங்க நகை ஆபரண சந்தையில் 40 சதவிகிதம் தென்னிந்தியாவே தக்க வைத்துக்கொண்டுள்ளதாக கூறுகிறது உலக தங்க கவுன்சில்.  

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.93.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.