தமிழ்நாடு

Gold Price: ஆறுதல் தந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.520 குறைவு

தங்கம் விலை சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Gold Price: ஆறுதல் தந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.520 குறைவு
சமீப காலமாக தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்தது. யாரும் எதிர்பார்க்காத விதமாக ரூ.75,000 தொட்டது. ஒரு சவரன் ரூ.1,00,000 வரை எட்டும் என்று பலரும் தகவல் தெரிவித்து வந்தனர். இதனால் நகைப்பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். தங்கம் விலை சிறிது குறைந்தால் தேவையானதை வாங்கிவிடலாம் என்று பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

தங்கம் விலை

இந்நிலையில், கடந்த ஆறு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நகைப்பிரியர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.9,005-க்கும் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.65 குறைந்து ரூ.8,940-க்கும் ஒரு சவரன் ரூ.520 குறைந்து 71,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும் ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.