தமிழ்நாடு

தொடர் விடுமுறை எதிரொலி...கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா தலங்களிலும், நகர்ப்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

தொடர் விடுமுறை எதிரொலி...கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை எதிரொலி...கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம், இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

இதனையடுத்து கொடைக்கானலில் காலை முதலே குளிர்ந்த இதமான கால நிலை நிலவுகிறது, இந்த இதமான சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து, பில்லர் ராக்,குணா குகை,பைன் மர சோலை, மோயர் சதுக்கம்,பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினையும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொண்டும்,ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தலங்களிலும்,நகர்ப்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை போக்குவரத்து காவலர்கள் கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலை விரைவாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.