தமிழ்நாடு

துரத்தும் வழக்கு...நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி.,கதிர் ஆனந்த்

2019 தேர்தல் சமயத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

துரத்தும் வழக்கு...நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி.,கதிர் ஆனந்த்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு

கடந்த 2019-ல் நடந்த தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொண்ட போது, துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் கிடங்குகளில் சோதனை நடத்தி 11.55 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காட்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதிரன் ஆகியோர் இன்று வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

இவ்வழக்கின் விசாரணைக்காக இன்று ஆஜரானார் வேலூர் எம்.பி., கதிர் ஆனந்த். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக 11.55 பதுக்கி வைக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் 2019 தேர்தலில் கதிர் ஆனந்த் போட்டியிட இருந்த வேலூர் தொகுதி தேர்தலை மட்டும் ரத்து செய்தது. பின்பு இரண்டு மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது.அதிலும் கதிர் ஆனந்த் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.