சென்னை, வண்ணாரப்பேட்டை மணிகண்டன் முதலி 6வது தெருவில் வசிப்பவர் காணிக்கைநாதன். இவர் திமுக வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக இருந்து வருகிறார். துணிக்கடை நிறைந்த வண்ணாரப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் வாடிக்கையாளர் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் துணிகளை வாங்க வருகின்றனர்.
மேலும் வண்ணாரப்பேட்டை அப்பகுதியில் அதிகமான கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால் போலீசார் சார்பில் கனரக வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ, உள்ளிட்டவை வாகனங்களுக்கு செல்ல தடை விதித்து பேரிகார்டு [தடுப்பு பலகை] அமைக்கப்பட்டது.
திமுக வழக்கறிஞர் அமைப்பாளரான காணிக்கைநாதன் என்பவர் போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் போலீசாரால் அமைக்கப்பட்ட பேரிகார்டை அகற்றி உள்ளார். இதனை அங்குள்ள சங்க வியாபாரிகளின் நிர்வாகிகள், தட்டிக்கேட்ட போது, வியாபாரிகளை திமுக வழக்கறிஞர் அவதூறாக பேசியும் தாக்கியும் கொலை மிரட்டலும் விட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம் அவர்கள் தலைமையில் சமாதானம் பேசுகையில் வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விட்டுச்சென்ற திமுக வழக்கறிஞர் காணிக்கை நாதனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று துணிகடை வியாபாரிகள் ஒன்றிணைந்து கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, மருத்துவமனைக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் உட்பட ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நின்றதால் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது. பின்னர், உடனடியாக வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தும், வியாபாரிகளிடம் சமரசம் பேசி காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கறிஞர் காணிக்கைநாதன் மீது புகாரை பெற்று கொண்டனர். தற்போது வண்ணாரப்பேட்டை போலீசார் புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.