பணம், நகை, வாகனங்களைத் தொடர்ந்து தற்போது செல்லப் பிராணிகளும் திருடப்படும் சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த உயர் ரக நாய் ஒன்றைக் கடத்திச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சாய்பாபா காலனி, கே.கே. புதூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் நந்தினி தம்பதியினர், ஆறு மாதங்களுக்கு முன்பு `ஜெர்மன் ஷெப்பர்ட்` என்ற உயர் ரக நாயை வாங்கி அன்புடன் வளர்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, அந்த நாய் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நடந்து வந்த ஒரு மர்ம நபர், நாயின் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளார். நாயைக் காணாத குடும்பத்தினர் தேடியபோது, அருகிலிருந்த ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், நாய் திருடப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக நந்தகுமார் தெரிவித்துள்ளார். பணம், பொருள் திருட்டு வரிசையில் செல்லப் பிராணிகளும் திருடப்படும் இந்தச் சம்பவம், கோவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.