தமிழ்நாடு

பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் காலமானார்

கொரோனா காலத்தில் அரசு சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன்

பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் காலமானார்
பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் காலமானார்
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் காலமானார்.

பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ்

பீலா வெங்கடேசன் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். வெங்டேசன்-ராணி தம்பதிகளுக்கு மகளாக 1969ம் ஆண்டு பிறந்தார். பீலாவின் அப்பா வெங்கடேசன், போலீஸ் டி.ஜி.பி.,யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது அம்மா ராணி வெங்கடேசன், பாரம்பரிய காங்கிரஸ்காரர்.

நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி வெங்கடேசன், 2006 சட்டமன்றத்தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனவர். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி தான் வெங்கடேசனின் சொந்த ஊர். வெங்கடேசன்-ராணி வெங்கடேசன் தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மகன் கார்த்திக். மகள் பீனா இருவரும் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட, மற்றொரு மகள் பீலா மட்டும் இந்தியாவில் இருக்கிறார்.

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர்

1997ம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆனார். பீலா ராஜேஷ் முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர் ஒதுக்கப்பட்டது. பின்னர் 2003ம் ஆண்டு பீகாரிலிருந்து பிரிந்து புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பின் மத்திய அரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளில் பணியாற்றினார். நீண்ட போராட்டத்துக்குப் பின், மீண்டும் தமிழ்நாடு கேடர், இவருக்குக் கிடைத்தது.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு துணை கலெக்டர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், சுகாதாரத்துறை செயலாளராக, 2019 பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார். கொரோனா தொற்று எண்ணிக்கை பரவலாக இருந்த காலகட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளராக திறமையாக பணியாற்றினார்.

உடல்நலக்குறைவால் மறைவு

பின்னர் தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த் 2 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் , ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.