தமிழ்நாடு

'பள்ளிக்கூடம்' ஆன்லைன் தளம்... இனி வீட்டில் இருந்தே பாட்டு, நடன கலைகளை கற்கலாம்!

'பள்ளிக்கூடம்' ஒரு புதுமையான ஆன்லைன் தளமாகும். அதாவது நடனம், பாட்டு பாடுதல், நடிப்புத் திறன் உள்ளிட்ட பல்வேறு கலைகளை ஆன்லைன் வாயிலாக 'பள்ளிக்கூடம்' தளம் கற்றுக் கொடுக்கிறது.

'பள்ளிக்கூடம்' ஆன்லைன் தளம்... இனி வீட்டில் இருந்தே பாட்டு, நடன கலைகளை கற்கலாம்!
Pallikoodam Platform

சென்னை: இன்றைய இளம் தலைமுறையினர் கல்வி மட்டுமின்றி நடனம், பாட்டு பாடுதல் என கூடுதல் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில் நடனம் கற்றுக்கொள்ள, பாட்டு பயிற்சி பெற மையங்கள் உள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் மேற்கண்ட கலைகளை கற்றுக்கொள்வதற்கான மையங்கள் இல்லை.

இதனால் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு மேற்கண்ட கலைகளை கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. இந்த குறையை பூர்த்தி செய்ய வந்துள்ளது 'பள்ளிக்கூடம்'. இது ஒரு புதுமையான ஆன்லைன் தளமாகும். அதாவது நடனம், பாட்டு பாடுதல், நடிப்புத் திறன் உள்ளிட்ட பல்வேறு கலைகளை ஆன்லைன் வாயிலாக 'பள்ளிக்கூடம்' தளம் கற்றுக் கொடுக்கிறது. 

கிரண் சம்பத், நர விஸ்வா மற்றும் புகழ் பெற்ற பின்னணிப் பாடகர் ரஞ்சித் கோவிந்த் ஆகியோரால் உருவாக்கப்பட 'பள்ளிக்கூடம்', உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கலைக் கல்வியை கொண்டு சேர்க்கிறது. மேலும் பரதநாட்டியம் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய கலைகளை அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் உலா வரச் செய்கிறது.

கிரண் சம்பத், நர விஸ்வா மற்றும் ரஞ்சித் கோவிந்த் ஆகியோரிடம் இருந்த கலைகள் மீதான ஆர்வமும், நமது பாரம்பரிய கலைகளை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணமும்தான் 'பள்ளிக்கூடம்' தளம் உருவாக காரணமாக அமைந்துள்ளது. நடனம், பாட்டு பாடுதல், நடிப்புத் திறன் உள்ளிட்ட கலைகள் மிகவும் புகழ்பெற்ற மற்றும் இந்த கலைகளில் கைதேர்ந்த கலைஞர்களின் வாயிலாக 'பள்ளிக்கூடம்' தளம் மூலம் கற்பிக்கப்படுகிறது.

பாட்டு கிளாஸின் லெவல் 1 மற்றும் லெவல் 2 வகுப்புகளை இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகர் ரஞ்சித் கோவிந்த், தனது காந்த குரல் வாயிலாக கற்றுக் கொடுக்கிறார். 

நடிப்பு கலையின் முதல் நிலை மற்றும் 2ம் நிலை வகுப்புகளை தேசிய விருது பெற்ற நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி கற்றுக் கொடுக்கிறார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆவார். 

நடனக் கலையின் லெவல் 1 மற்றும் லெவல் 2 வகுப்புகளை பிரபல பரத நாட்டியக் கலைஞர் வித்யா அரசு கற்றுக் கொடுக்கிறார்.  

8 வாரங்கள் கொண்ட வகுப்பில் பாடமுறை வாயிலாகவும், தினசரி பயிற்சி (daily practices) நேரடி பயிற்சி ( live classes) மற்ற கலைஞர்களிடம் இருந்து வரும் கருத்துக்கள் அடிப்படையில் மேற்கண்ட கலைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. விரைவில்  'பள்ளிக்கூடம்' தளத்தின் மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அடுத்த 5-10 ஆண்டுகளில் புதிய தலைமுறை கலைஞர்களுக்கு அவர்களின் தனித்துவமான பாணியைக் கண்டறியவும், கற்றவர்கள் மற்றும் படைப்பாளிகளின் உலகளாவிய சமூகத்தை உருவாக்கவும் 'பள்ளிக்கூடம்' திட்டமிட்டுள்ளது. 

'பள்ளிக்கூடம்' தொடர்ந்து வளர்ந்து வருவதால், கலைகளை கற்பவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இந்த புரட்சிகர எட்டெக் தளத்தில் இணைந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு https://thepallikoodam.com/ என்ற 'பள்ளிக்கூடம்' இணையதளத்தை பார்வையிடலாம்.