தமிழ்நாடு

சென்னைக்கு சுத்துப்போட்ட மேகங்கள்.. இன்று இரவு சம்பவம் இருக்கு.. வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்!

தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் மிக அதிகமாக இருந்தது. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

சென்னைக்கு சுத்துப்போட்ட மேகங்கள்.. இன்று இரவு சம்பவம் இருக்கு.. வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்!
Rain In Chennai

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக திருச்சி, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 32 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டியது. தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் மிக அதிகமாக இருந்தது. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. 

இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது. இதேபோல் சென்னையை ஒட்டியுள்ள புறநகர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மாலை பரவலாக மழை கொட்டியது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், அடையாறு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் கொட்டியது. 

இந்நிலையில், சென்னையில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''நேற்று புயல்களின் பாதை உருவாகி இருந்த நிலையில், சென்னை நேற்று மழையை தவறவிட்டது. ஆனால் இன்று, குறிப்பாக இரவில் சென்னையில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். 

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவாலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘’மத்திய மேற்கு  மற்றும் அதனை  ஒட்டிய  வடமேற்கு வங்ககடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா -  தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 

இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் 25ம் தேதி (நாளை) முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.