தமிழ்நாடு

சென்னை மக்களின் கவனத்திற்கு!.. 28 மின்சார ரயில்கள் ரத்து.. நேரம் மாற்றம்

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மக்களின் கவனத்திற்கு!.. 28 மின்சார ரயில்கள் ரத்து.. நேரம் மாற்றம்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று தற்காலிகமாக ரத்து

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணி வரை 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன

முக்கிய நேரங்களில் 5 முதல் 10 நிமிஷத்துக்கு ஒரு ரயிலும், பிற நேரங்களில் 20 முதல் 25 நிமிஷத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் இரு மாா்க்கமாகவும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும் மற்ற ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் நேரத்துக்கு பதிலாக 5 முதல் 10 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும்

சில ரயில்களின் நேரம் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் வகையில் மின்சார ரயில் அட்டவணை  மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

ரத்து செய்யப்படும் ரயில்கள் -  கடற்கரை-தாம்பரம் தாம்பரம்-கடற்கரை

ரயில் புறப்படும் நேரம்

காலை 6.52 - காலை 5.12

காலை 7.33 - காலை 6.03

காலை 8.43 - காலை 7.17

காலை 9.40 - காலை 8.19

காலை 11.41 - காலை 9

காலை 11.30 - காலை 9.40

பகல் 12.30 - காலை 10.40

பகல் 12.50 - காலை 11.30

பிற்பகல் 3.15 - காலை 11.40

மாலை 4.25 - பகல் 1.40

மாலை 5.43 - பிற்பகல் 2.57

மாலை 6.35 - மாலை 4.15

இரவு 7.57 - மாலை 5.10

இரவு 8.25 - மாலை 6.26