இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில், களத்தில் வீரர்கள் பேசிக்கொள்வது மைக் ஸ்டெம்பில் பதிவாகி வருகிறது. அதில் சில க்ளிப்களை ஒளிபரப்பு நிறுவனம் தனியாக தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
பெரும்பாலும் ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகிய ரிஷப் பந்த்தின் பேச்சுகள் இணையத்தில் வைரலாகும். அதற்கு காரணம், எதிரணி வீரர்களுடன் அவர் உரையாடுவது சிரிப்பலையே உண்டாக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்- ஜடேஜா இடையே நடந்த உரையாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீல்டரை மாற்றுவதில் பயனில்லை: ஜடேஜா
இதற்குக்காரணம், களத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்- விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களது விக்கெட்களை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்து வீசி வந்தனர். அப்போது ஸ்லிப்பில் நின்றுக்கொண்டிருந்த கேப்டன் சுப்மன் கில், ஜடேஜாவினை நோக்கி, “மிட் ஆப் இடத்தில் நின்றுக்கொண்டிருந்த வீரரை, லாங் ஆப் பகுதிக்கு மாற்றுங்கள். அவர் இறங்கி விளையாட முயல்வார். விக்கெட் விழ வாய்ப்புள்ளது” என்றார்.
இதற்கு ஜடேஜா, “பீல்டரை அங்கு நிறுத்துவதில் எந்த பயனும் இல்ல. அவர் இங்கேயே நிற்கட்டும். பந்து அந்த பகுதியில் சென்றால், அங்கு பிடிக்க யாராவது நிற்க வேண்டும். கேட்ச் பிடிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதன்பின் பீல்டிங்கில் எவ்வித மாற்றமும் செய்யாமல், அமைதியாக சுப்மன் கில் பின்னோக்கி சென்று ஸ்லீப் பகுதியில் நின்றார். இந்த வீடியோ வைரலானதற்கு இரண்டு விதமான காரணங்கள் உள்ளன.
தோனி- குல்தீப் உரையாடலுடன் ஒப்பீடு:
ஒன்று புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில், பவுலர்கள் கூறுவதை கேட்டு அவருக்கு ஏற்றாற் போல் பீல்டிங் செட் செய்கிறார். பவுலர்களின் கேப்டனாக திகழ்கிறார் என சுப்மன் கில்லை பாராட்டி ஒரு சிலர் கமெண்ட் பதிவிட்டுள்ளார்கள்.
இன்னும் சிலர், தோனி-குல்தீப் யாதவ் இடையேயான பழைய உரையாடலை நினைவுக்கூர்ந்து கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். குல்தீப் யாதவ், தனக்கு ஏற்றவாறு பீல்டிங் செட் செய்ய தோனியிடம் கோரிக்கை வைப்பார். அதற்கு தோனி, இது தான் பீல்டிங் செட்-அப், மாற்றமுடியாது. விருப்பமிருந்தால் பந்து வீசு, இல்லையென்றால் நான் வேற பவுலரை மாற்றிக்கொள்கிறேன் என குறிப்பிட்டு இருப்பார். இந்த உரையாடல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆல்-டைம் பேவரைட் மைக்-ஸ்டெம்ப் உரையாடல் லிஸ்டில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Field set. Trap laid. Mic on🎙ft. #ShubmanGill #RavindraJadeja
— Star Sports (@StarSportsIndia) July 6, 2025
ENG 🆚 IND 👉 2nd TEST, Day 5 | LIVE NOW ➡ https://t.co/pmTofIWkZ9 pic.twitter.com/YjkbGKjiCv