இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறப்பாகப் பந்துவீசி தென் ஆப்பிரிக்காவைச் சுருட்டினார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் ஆட்டம்
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ரிக்கல்டனும் மார்க்ரமும் நிதானமாகத் தொடங்கினர். ஆனால், பும்ராவின் வேகத்தில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின. ரிக்கல்டன் 23 ரன்களிலும், மார்க்ரம் 31 ரன்களிலும் பும்ராவால் அவுட் ஆக்கப்பட்டனர். கேப்டன் பவுமா (3 ரன்) குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.
தென் ஆப்பிரிக்க அணியின் மற்ற வீரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாகப் பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார். சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணியின் பேட்டிங் நிலை
தென் ஆப்பிரிக்காவை 159 ரன்களுக்குச் சுருட்டிய பின், இந்தியா தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 12 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். கே.எல். ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர்.
முதல் நாள் முடிவில் ஸ்கோர்
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 13 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

LIVE 24 X 7