2010 ஆம் ஆண்டு டான்ஸ் இந்தியா டான்ஸ் (லிட்டில் மாஸ்டர்ஸ்) நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் சின்னத்திரையில் கவனத்தை பெற்றார் அவ்னீத் கவுர். அக்டோபர் 13,2001 ஆம் ஆண்டு பஞ்சாபின் ஜலந்தரில் பிறந்த அவ்னீத் கவுரின் இன்ஸ்டா பக்கத்தினை சுமார் 32 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். Life OK-வில் 2012 ஆம் ஆண்டு வெளியான “மேரி மா” மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். யாஷ் ராஜ் பிலிம் தயாரிப்பில் வெளியான “மர்தாணி” படத்தின் வாயிலாக வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். இசை வீடியோக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என தொடர்ந்து பணியாற்றி வருகிறார் அவ்னீத் கவுர்.
இந்நிலையில் அவ்னீத் கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற கிராப் டாப், ஸ்கர்டில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றினை பதிவிட்டார். திடீரென்று பார்த்தால் அந்த புகைப்படத்தை விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்திலிருந்து லைக் செய்திருப்பதை ரசிகர்கள் பார்த்தனர். இந்த செய்தி காட்டூத் தீயாக பரவியது. பலர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவை அந்த புகைப்படத்தின் கீழ் டேக் செய்யத் தொடங்கினர்.
அதற்கு முந்தைய நாள் தான் அனுஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார் விராட் கோலி. சில பயனர்கள் அவ்னீத் கவுர்- விராட் கோலி இடையே உறவு என வதந்திகளை கிளப்ப, இணையத்தில் ஒரு சின்ன லைக் பெரிய பேசுப்பொருளாகியது.
இதனைத் தொடர்ந்து விராட் கோலி தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு பதிவு விராட் கோலியின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், “ சில அல்கரிதம் குளறுபடியால், எனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து தவறுதலாக அந்த புகைப்படத்திற்கு லைக் (interaction) வந்துள்ளது. இதற்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை. தேவையற்ற அனுமானங்களைச் செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி” என விராட் கோலி தரப்பில் கூறப்பட்டது.

சிறிது நேரத்திலேயே அவ்னீத் கவுர் புகைப்படத்திற்கு விராட் கோலியின் பக்கத்திலிருந்து செய்யப்பட்ட லைக் மறைந்தது.இருந்தாலும், அதன் ஸ்கீரின் ஷாட்கள் இணையத்தில் பரவத்தொடங்கின. தற்போது பலரும் இதை ஒரு மீம் மெட்ரீயலாக கிண்டல் செய்து வருகின்றனர்.
அவ்னீத் கவுர்- கிரிக்கெட் வீரர் குறித்த வதந்தி எழுவது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது அவ்னீத், தான் கிரிக்கெட் போட்டியை காண சென்றுள்ளேன் என்ற புகைப்படத்தை வெளியிட்டார். அப்போது, கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் நடிகை அவ்னீத் கவுருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்கிற வதந்தி இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.