இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாளையங்கோட்டையில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணியினை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக பாளையங்கோட்டையில் நடைப்பெற்ற நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பங்கேற்றிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கான விடுதிகள் அமைப்பது, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு: படிப்படியாக அமலாக்கம்
சட்டமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு தொடர்பாக பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சபாநாயகர், தற்போது எந்தெந்த கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அவற்றை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருவதாகக் கூறினார். மீதமுள்ள செயல்பாடுகளை எப்படி நேரலை செய்யலாம் என கலந்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும், எந்தெந்த வார்த்தைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
படிப்படியாக நேரலை செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், அரசியல் தொடர்பான கருத்துக்கள் பேசப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உன்னிப்பாக அந்த விவகாரம் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். ஏற்கனவே உள்ள அரசைப் போன்று "நாங்கள் செய்ய முடியாது" என சொல்ல மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூத்த குடிமக்கள் விடுதி:
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள காந்திமதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 26 அறைகள் கொண்ட காப்பகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 52 முதியவர்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த காப்பகத்தின் பணிகள் விரைவில் தொடங்கி அடுத்த ஆண்டுக்குள் முடிவடையும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இத்திட்டத்திற்காக முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் இரட்டை வேடம் போடுவதில்லை: சபாநாயகர் அப்பாவு கருத்து
'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரம் குறித்து அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது. வேடம் போடுவது நடிகர்களுடைய செயல். பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது. மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர் செய்து கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
சட்டமன்ற ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கல்:
தமிழக சட்டப்பேரவை ஆரம்பித்து 104 ஆண்டுகள் ஆகி உள்ளதாகவும், 1952 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டப்பேரவையில் எந்தெந்த தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பதை ஆன்லைனில் தேடினால் எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். 1921 முதல் 1952 வரையிலான சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், வரும் சட்டமன்றம் முடிவதற்குள் முழுமையாக அனைத்து பேச்சுகளும் ஆன்லைனில் ஏற்றப்படும் என்றும் அப்பாவு உறுதிபடக் கூறினார்.