பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விளக்கம்
நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைவான தகவல்களை திமுக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய அரசு, மாநில அரசுக்கு 14ஆம் தேதியன்று அனுப்பிய கடிதத்தில், அந்த அறிக்கையைத் திருப்பி (DPR - Detailed Project Report) அனுப்பி இருக்கிறது. முதல்வர் ஏன் 15-ம் தேதி இந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதவில்லை? மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்?
மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. திட்ட அறிக்கை மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோவை, மதுரைக்கு வந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து விமர்சனம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், "தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60 சதவீதம் உயர்ந்திருக்கிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றில் தான் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது" என்று குற்றம் சாட்டினார். மேலும், பாதாள சாக்கடை திட்டத்திற்குத் தேவையான உபகரணங்கள் இல்லாத நிலை இருப்பதாகவும், சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

LIVE 24 X 7