ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவரை கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி ஒரு மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக்காட்ட சென்றபோது தப்பிக்க முயன்றதாகவும், காவலர்களை தாக்கியதாகவும் கூறி அவரை என்கவுன்டர் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 28 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கிற்கு மூளையாக செயல்பட்டதாக சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
புதிய மாநில தலைவர் நியமனம்
ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பிஎஸ்பி தேசிய தலைவர் மாயாவதி அப்போதே வலியுறுத்தினார். தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஆம்ஸ்ட்ராங் மறைவின்போது நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு பிறகு வழக்கு ஒருபுறம் இருக்க, மறுபுறம் புதிய மாநிலத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது இருந்த சூழலில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கை எழுந்தது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் மறைவின் சோகம், குழந்தை வளர்ப்பு என குடும்ப பணிகள் காரணமாக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், புதிய மாநிலத்தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் என்பவரை நியமித்து கட்சி தேசிய தலைமை அறிவித்தது. ஆம்ஸ்ட்ராங்கின் நண்பரான ஆனந்தன் பகுஜன் சமாஜ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் மறைந்த ஆம்ஸ்ட்ராங்குடன் 12 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து கட்சியில் பணியாற்றியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு
இந்த நிலையில், ஆனந்தன் புதிய மாநிலத் தலைவராக பதவியேற்றவுடன், கட்சியில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நியமனம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் ஆனந்தனுக்கு ஆதரவாக உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங்கால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு பொறுப்புகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சமீபத்தில் பிஎஸ்பியின் கூட்டம் ஒன்று ஆனந்தன் தலைமையில் கூடியதாகவும், அதில் ஆம்ஸ்ட்ராங்கால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருமதி ஆம்ஸ்ட்ராங் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்து முறையிட்டார். மேலும் தனது கணவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை அழைக்காமல் கூட்டத்தை நடத்துவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் கட்சி விதிகள் தெரியாமல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
கட்சி பணியில் ஈடுபடமாட்டார்
இந்த நிலையில், திருமதி ஆம்ஸ்ட்ராங் இனி கட்சிப்பணிகளில் ஈடுபட மாட்டார் என ஆனந்தன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் எம்.பியும், மத்திய ஒருங்கிணைப்பாளருமான ராஜாராம் ஜி என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாபாசாகேப் Dr.அம்பேத்கர் பிறந்த 135வது பிறந்த நாளில், பகுஜன் சமாஜ் கட்சி (BSP), அனைவருக்கும் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. அனைத்து பெரும்பான்மை மக்களுக்குமான சமூக முன்னேற்றத்திற்கும் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டு, அரசியல் சட்டம் மூலம் பெற்று தந்தார்.
எங்கள் தேசிய தலைவர் மாயாவதியின் சீர்மிகு தலைமையின் கீழ் மத்தியில் ஆளும் கட்சியாக மாறுவோம் எனவும், தமிழ்நாட்டில் மாநில தலைவர் பி.ஆனந்தன் தலைமையில் கட்சியை வளர்ந்து மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பெறுவோம் என உறுதி ஏற்கின்றோம். பாஜக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் மற்றும் திமுக ஆளும் தமிழகத்தில் பட்டியில மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை BSP கடுமையாக கண்டிக்கிறது. மேலும் ஆளும் அரசுகள் பட்டியில மக்களுக்கு எதிராக நடைபெறும் அசாம்பவிதங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை சட்டத்தின் கீழ் தண்டிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். மேலும், பட்டியிலன மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை (SC/ST Fund) செலவிடாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
திறனுக்கு ஏற்றாற்போல் பணி
சென்னையில் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலத்தில் தேசிய தலைவர் மாயாவதிஜி முழக்கமிட்டது போல், முன்னாள் பி.எஸ்.பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் ஆளும் கட்சிக்கு தொடர்பு இல்லையெனில், வழக்கை முழுமையான விசாரணைக்காக சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும், நீதியினை நிலைநாட்ட வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், பி.எஸ்.பி தமிழ்நாடு தனது மண்டல கட்டமைப்பை மறுசீரமைத்து புதிய பொறுப்பாளர்களின் விவரங்களை வெளியிடுகிறது.
எங்கள் தேசிய தலைவரின் உத்தரவின்படி பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங் தனது குழந்தையும், குடும்பத்தை மட்டும் கவனித்து கொள்வார் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்துவார். இனிமேல், அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார். ஆர்ம்ஸ்ட்ராங்கின் சகோதரர்கள் அவர்தம் திறனுக்கு ஏற்றாற்போல் கட்சிப் பணிகளை தொடர்வார்கள்,
மேலும் BSP கட்சி ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடைசிவரை உறுதியான இருக்கும். தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையின் கீழ் கட்சியை வலுப்படுத்தவும், அனைத்து தேர்தல்களை எதிர்கொள்ளவும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொருப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து உழைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைமை முடிவு
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து புதிய மாநிலத்தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி புதிய அமைப்பு உருவாக்கினர். அப்போதே கட்சியில் உட்கட்சி பூசல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமதி ஆம்ஸ்ட்ராங் ஓரங்கட்டப்படுவது ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரைவில் கட்சி தலைமையிடம் பேசிய உரிய தீர்வை திருமதி ஆம்ஸ்ட்ராங் பெறுவார் என்று சொல்லப்படுகிறது. ஆனந்தன் மற்றும் திருமதி ஆம்ஸ்ட்ராங் இடையே எழுந்துள்ள பிரச்னை கட்சி தலைமை வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். அவரின் மனைவிக்கு கட்சியில் அதிகாரம் கொடுக்கப்படுமா? அல்லது புதிய மாநிலத் தலைவராக உள்ள ஆனந்தனுக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.