அரசியல்

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0: "துரோகிகளுக்குப் பாடம் புகட்டும்"- பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள மாநாடு, "நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டும்" மாநாடாக அமையும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0:
Premalatha Vijayakanth
தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0, "நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும், மக்கள் நலனைப் புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும்" மாநாடாக அமையும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மாநாடு குறித்த முக்கிய அறிவிப்புகள்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் நடக்க இருக்கிறது. அதற்காக கட்சி சார்பில் ஒரு கடிதம் உங்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறேன். வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கடலூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாசார் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடத்திட பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

அழைப்பு மற்றும் இலக்கு

நம் தலைவர் இல்லாமல் நாம் நடத்த இருக்கின்ற முதல் மாநாடு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தும் மாநாடு, இந்த மாநாட்டின் வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி. எனவே மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாநாட்டிற்கு என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே நீங்கள் அனைவரும் பெருந்திரனாக வந்து அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர் தலைமையில் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், தொண்டர் அணி சகோதரர்கள் மற்றும் தொண்டர்களும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், ஒவ்வொரு கிளைகளிலிருந்தும் பொதுமக்களையும் அழைத்து கொண்டு இந்த மாநாட்டில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும்.

வரவிருக்கும் 2026 தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமைய இருப்பதோடு இந்த வெற்றி ஒவ்வொருவரின் வெற்றி என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும், கிளையிலும் பேனர்கள், கொடிகள் அமைத்து தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கடலூர் மாநாட்டில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும். நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும். மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.