இந்தியாவின் மிகவும் சவாலான பொதுத் தேர்வுகளில் ஒன்றான UPSC முதல்நிலை தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் குறித்த கேள்வி இடம்பெற்றுள்ளது. இது குகேஷ் மற்றும் செஸ் விளையாட்டுக்கு கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிக உயரிய அரசு அலுவலக பொறுப்புகளுக்கு, தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்காக சிவில் சர்வீஸ் தேர்வானது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு, நேற்றையத் தினம் (மே 25) நாடு முழுவதும் நடைபெற்றது. UPSC தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் கடந்த 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைப்பெற்ற UPSC முதல்நிலை தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் குறித்து ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.
UPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி:
செட் A வினாத்தாளில், 100-வது கேள்வி டி.குகேஷ் குறித்து கேட்கப்பட்டிருந்தது. எது சரி? என்கிற அடிப்படையில் இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
1. 2024 இல் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிப் போட்டியில், ரஷ்ய வீரர் இயன் நெபோம்னியாட்சியை தோற்கடித்து உலகின் இளைய செஸ் சாம்பியனாக குகேஷ் டோமராஜு வெற்றி பெற்றார்.
2. அமெரிக்க சதுரங்க வீரர் அபிமன்யு மிஸ்ரா, உலகின் இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மேற்கண்ட இரண்டு தகவல்களில் எது சரி? என்பதற்கு பதில் அளிக்கும் வகையில் 4 விருப்பங்கள் (4 option- choose the best) கொடுக்கப்பட்டிருந்தன.
1. தகவல் 1 மட்டுமே சரி
2. தகவல் 2 மட்டுமே சரி
3. இரண்டு தகவலும் (1 & 2 ) சரி
4. இரண்டு தகவலும் (1 & 2 ) தவறு
சரியான பதில்: 2) தகவல் 2 மட்டுமே சரி என்பதாகும்.
டிசம்பர் 12, 2024 அன்று தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆனால், அவர் எதிர்த்து போட்டியிட்டது ரஷ்ய வீரர் இயன் நெபோம்னியாட்சி இல்லை. அவர் எதிர்த்து விளையாடியது சீனாவின் டிங் லிரைனை. அதே நேரத்தில், அமெரிக்க சதுரங்க வீரர் அபிமன்யு மிஸ்ரா, உலகின் இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையினை 2021 ஆம் ஆண்டு படைத்தார். செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றபோது அவருடைய வயது 12 ஆண்டுகள்,4 மாதங்கள், 25 நாட்கள் மட்டுமே.
டி.குகேஷ் குறித்த கேள்வியானது, சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளில் இடம்பெற்றுள்ளது செஸ் விளையாட்டில் பங்கேற்கும் இளம் வீரர்களை உத்வேகம் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
நேற்று UPSC முதல்நிலை தேர்வில் ”சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்?’ என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கான பதில் பகுதியில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், பாஸ்கர் ராவ் ஜாதவ், தினகர் ராவ் ஜவால்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. பெரியாரின் பெயரை சாதி அடையாளத்துடன் குறிப்பிட்டு இருந்ததால் இந்த கேள்வி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.