இந்தியா

ரத்த வெள்ளத்தில் கிடந்த கர்நாடக முன்னாள் டிஜிபி.. நடந்தது என்ன?

கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த கர்நாடக முன்னாள் டிஜிபி.. நடந்தது என்ன?
ரத்த வெள்ளத்தில் கிடந்த கர்நாடக முன்னாள் டிஜிபி.. நடந்தது என்ன?
பெங்களூரு HSR லேஅவுட் பகுதியில் உள்ள மூன்று மாடி குடியிருப்பில் கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று சொத்து விவகாரம் தொடர்பாக ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவி பல்லவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பல்லவி சமையலறையில் இருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து ஓம் பிரகாஷ் முகத்தில் தூவியதுடன் கத்தியால் அவரை பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது.

ஓம் பிரகாஷ் உயிரிழப்பு

இதையடுத்து, ஓம் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பல்லவி இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஓம் பிரகாஷை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மனைவி பல்லவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மனநோயால் பாதிக்கப்பட்ட பல்லவி

ஓம் பிரகாஷ் கொலை செய்த பின்னர் பல்லவி தனது நண்பருக்கு வீடியோ கால் செய்து ‘அந்த அரக்கனை கொன்றுவிட்டேன்” என்று கூறியதாக தெரிகிறது. மேலும், பல்லவி 12 வருடங்களாக ஸ்கிசோஃப்ரினியா என்கிற மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் 1981-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் கர்நாடக மாநில டிஜிபியாகவும் பணியாற்றியுள்ளார்.