Operation Sindoor: இந்தியா சார்பில் ’ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மே 7 ஆம் தேதி நள்ளிரவு 1:05 மணி முதல் 1:30 மணி வரை என வெறும் 25 நிமிடங்களில் 9 தீவிரவாத முகாம்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளன. உளவுத்துறை கொடுத்த நம்பகமான தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வான்வெளி தாக்குதலுக்கு வாய்ப்பு:
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகமாகியுள்ள நிலையில், இந்தியாவில் 27 விமான நிலையங்களை மே 10 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. போர் ஏற்படும் சூழ்நிலை அமைந்தால், வான்வெளி தாக்குதல் முக்கியமாக இடம்பெறும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமையான இன்று மட்டும் இந்தியாவில் 430 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேப்போல் பாகிஸ்தானில் சுமார் 147-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே-10 வரை மூடப்படும் 27 விமான நிலையங்களின் விவரம் பின்வருமாறு-
ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, பதிண்டா, ஹல்வாரா, பதான்கோட், பூந்தர், சிம்லா, காகல், தர்மசாலா, கிஷன்கர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானர், முந்த்ரா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர், காண்ட்லா, கேஷோட், பூஜ், குவாலியர் மற்றும் ஹிண்டன் ஆகியவை அடங்கும்.
பெரும்பாலான சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. அதற்குப் பதிலாக அகமதாபாத் மற்றும் மும்பை வழியாக
செல்லும் வகையில் தங்கள் வான்வெளி பாதையினை மாற்றியுள்ளன சர்வதேச விமான நிறுவனங்கள்.