டெல்லி குருகிராமில் 46 வயதுடைய விமான பணிப்பெண் ஒருவர் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் பயிற்சிக்காக ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார். அப்போது நீச்சல் குளத்தில் இருந்த போது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அறிந்த அந்த விமான பணிப்பெண்ணின் கணவர் அவரை ஏப்ரல் 6-ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அப்போது, ஐசியு-வில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அப்போது தான் பேசமுடியாத நிலையில் அரை மயக்கத்தில் இருந்ததாக விமான பணிபெண் கூறியுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தின் போது அருகில் இரண்டு செவிலியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த விமான பணிப்பெண் இச்சம்பவம் குறித்து அவரது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சர்தார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் போலீஸார் சந்தேக நபர்களை அடையாளம் காண மருத்துவமனையின் பணி பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.