தீவிரவாதிகள் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 பேர் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை தீவிரவாத தாக்குதல் நடந்த சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
28 பேர் உயிரிழப்பு
மேலும் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மோடி சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு கடும் சோதனைகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மக்களை நினைத்து உடைகிறேன்
இதுகுறித்து நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில், “ ஒரு காலத்தில் நானும் பஹல்காமின் சுற்றுலாப் பயணிதான். தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து என் மனம் உடைந்து போனது.இந்த சம்பவத்திற்கு பிறகு கூடுதல் கண்காணிப்புக்கும் ஆய்வுக்கும் உள்ளாகும் காஷ்மீர் மக்களை நினைத்தால் மனம் மேலும் உடைந்துபோகிறது.
நாட்டில் பிரிவினைவாதம் அதிகரித்து வரும் நிலையில், மதத்தையும், சமூகத்தை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக்கூடாது. நான் பெரும்பாலும் எதையும் சொல்வதில்லை. ஆனால், இதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். வெறுப்புக்கு இங்கு இடமில்லை. எனது கமெண்ட் பாக்சிலும், உலகத்திலும் வெறுப்பு வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.