நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு ‘சருமம்’. இதனுடைய பயன்கள் எண்ணற்றவை. உடலின் தட்பவெப்ப நிலையை ஒரே சீராக வைத்துக்கொள்கிறது. நீரிழப்பைத் தடுக்கவும், வெளிப்புற நோய்க்கிருமிகள், மாசு, அதிக வெப்பம், குளிர், மழை உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
அதிக வெப்பத்தின்போது வியர்வைச் சுரப்பிகள் மூலமாக வியர்வையை வெளியேற்றி உடலைக் குளிர்விக்கிறது. அதிகக் குளிரின்போது நடுக்கத்தை ஏற்படுத்தி தசைகளை விரைவாக அசைக்கவைத்து உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது. அத்தியாவசியமான வைட்டமின் ‘டி’யைத் தயாரித்து நம்முடைய எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
சருமத்தை எப்படி பாதுகாப்பது?
மண்ணில் விளையாடிவிட்டு கை, கால் கழுவாமல் இருந்தால் சரும வியாதிகள் வர வாய்ப்பு உண்டு. சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அதிக வெப்பம், அதிக குளிரில் இருப்பதும் நம் சருமத்துக்கு உகந்தது அல்ல. எண்ணெய்ப் பசையில்லாத சோப்புகளைப் பயன்படுத்துவது சரும வியாதிகளை ஏற்படுத்தக்கூடும்.
சிரங்கு போன்ற சரும வியாதிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டவை. எனவே, அப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தும் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. இயற்கைத் தந்த சரும நிறத்தை செயற்கையில் மாற்ற முயற்சித்தால் தேவையற்ற பின்விளைவுகள் ஏற்படலாம். காலணி அணியாமல் நடந்தால் சருமத்துக்கு கெடுதல் விளையும் தவிர தரையிலிருக்கும் கிருமிகள் சருமத்தின் மூலமாக உடலுக்குள் புகவும் வாய்ப்புகள் அதிகம்.
சரும வறட்சி
குளிர்க்காலங்களில் சருமம் வறண்டு போகாமலிருக்க நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை முகத்தில் தடவிப் பாதுகாக்கலாம். கடலைமாவு, பாசிப்பயறு கொண்டும் முகத்தைக் கழுவலாம். முகப்பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் சிறிய கொப்புளங்கள் வராமல் தடுக்க காய்கறி மற்றும் கீரைகளை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும்.
முகப்பருக்களைக் கிள்ளவே கூடாது. துரித உணவுகள், அதிகளவு கேக் மற்றும் சாக்லேட்டுகளைத் தவிர்க்கவேண்டும். சருமத்தில் திடீரென ஏற்படும் உணர்ச்சியற்ற தேமல், வெண்புள்ளிகள் திடீரெனப் பெரிதாகும் மச்சம் ஆகிய பிரச்சனைக்கு மருத்துவரிடம் காண்பித்து முறையான சிகிச்சைப் பெறவேண்டும்.