கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்கிறது. கூழ், பதநீர், தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்துள்ளது. செக்கச் சிவந்த நிறத்தில்தான் தர்பூசணிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், ‘மஞ்சள் நிற தர்பூசணி’களும் தற்போது பரவலாக விற்கப்படுகின்றன. ‘இந்தப் பழத்தை வாங்கிச் சாப்பிடலாமா? ஒவ்வாமை ஏதாவது ஏற்படுமா?’ என்று பலருக்கும் பலவித சந்தேகம் இருக்கும். இதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
எப்படிப் பார்த்து வாங்குவது?
சிவப்புநிற தர்பூசணி மட்டுமல்ல மஞ்சள் தர்பூசணி பழங்களையும் சீக்கிரம் பழுக்கவைக்கவும், அதிக இனிப்புச் சுவைக்கும், கூடுதலான நிறத்திற்கும் ஊசிகள் மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, தர்பூசணியின் மணத்திலோ, நிறத்திலோ, சுவையிலோ மாறுபாடு இருந்தால் வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது. தர்பூசணி வாங்கிவந்து ஒரு சிறிய துண்டை வெட்டியெடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி போட்டுவையுங்கள்.
சிறிதுநேரம் கழித்து அந்தத் தண்ணீரைப் பாருங்கள். செயற்கை சுவையூட்டி ஊசி மூலம் அந்தப் பழத்தில் செலுத்தப்பட்டிருந்தால் தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறியிருக்கும். இல்லையெனில், அது நல்ல பழம்தான். வெளிப்புறம் அடர்பச்சையாகவும், பழத்தின் உள்பகுதி வெள்ளையாகவும், சுவை ரொம்ப இனிப்பாகவும் இருந்தால் அது சுவையூட்டி செலுத்தப்பட்ட பழம்தான். தர்பூசணியைப் பொதுவாக 7 முதல் 8 நாட்கள் வரை வெட்டாமல் வைத்திருந்தால், கெட்டுப்போகாமல் இருக்கும்.
ஆனால், வாங்கிவந்த 2 நாள்களிலேயே கெட்டுவிட்டது என்றால், அது பழைய பழமாக இருக்கலாம். இல்லாவிட்டால், சுவையூட்டி செலுத்தப்பட்ட பழமாகவும் இருக்கலாம். பழத்தை சீக்கிரம் பழுக்கவைக்க, சில வியாபாரிகள் ‘எரித்ரோசின்’ மற்றும் ‘Ponceau 4R’ பவுடர் மாதிரியான ரசாயனங்களை ஊசி மூலமாக செலுத்தி நிறம் மற்றும் சுவையைக் கூட்டி விற்கிறார்கள். இந்த ரசாயனங்கள் தலைவலி, காய்ச்சல் மட்டுமல்லாமல் புற்றுநோயைக்கூட ஏற்படுத்தக்கூடியவை.
யார் சாப்பிடக் கூடாது?
பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரால் தர்பூசணியைத் துடைத்தால் சிவப்புநிறம் அதில் ஒட்டிக்கொள்ளும். இப்படி இருந்தால், அந்தப் பழம் ஆபத்தானது. இவற்றை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து நிறமூட்டி கலக்கப்பட்ட தர்பூசணிகளைப் பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மஞ்சள் தர்பூசணியை அளவோடு சாப்பிடுவது நல்லது. அது, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதுமட்டுமல்ல தலைச்சுற்றல், அதிகமாக வியர்த்தல், அகோரப் பசி, விரைவான இதயத் துடிப்பு, குழப்பம், எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். எனவே, கூடுதல் கவனம் தேவை.