சினிமா

பெண்களுக்கு தேவையான கல்வியை கொடுக்க வேண்டும் – நடிகை தேவயானி

வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.

பெண்களுக்கு தேவையான கல்வியை கொடுக்க வேண்டும் – நடிகை தேவயானி
நடிகை தேவயானி
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனியா அமைப்பு சார்பில் 1002 பெண்களைத் தேர்ந்தெடுத்த அவர்களுக்குத் தேவையான கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகள் படிக்க வைத்து வேலை வாங்கித் தருகின்றனர்.அதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நடிகை தேவயானி கலந்து கொண்டு அந்த அமைப்பில் லோகவினை வெளியிட்டார்.

பெண்கள் என்றாலே சக்தி

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேவயானி, “பெண்களுக்குக் கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதனை இந்த அமைப்பு செய்து கொடுப்பது பாராட்டுக்குரிய ஒன்று. பெண்கள் என்றாலே சக்தி. தைரியமாகவும், விவேகமாகவும் இருக்கக்கூடியவர்கள் பெண்கள். அவர்களுக்குத் தேவையான கல்வியை கொடுத்துவிட்டால் நிச்சயமாக அவர்களால் எந்தத் துறையில் சாதிக்க முடியும்.

வரதட்சணை கேட்கக் கூடாது. அது தவறான விஷயம் என்பதை எனது கணவர் ராஜ்குமார் இயக்கிய காதலுடன் படத்தில் சொல்லியுள்ளோம்.அந்தப் படத்திற்கு சிறந்த குடும்ப திரைப்படம் என்ற விருதினை தமிழக அரசு எங்களுக்கு அளித்திருக்கிறது.

தைரியமாக இருக்க வேண்டும்

பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். வரதட்சனை கொடுப்பது கேட்பது தவறான விஷயம். பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.அவர்களுக்குத் தேவையான கல்வியை கொடுக்க வேண்டும்” என்றார்.