திரைப்படம் மற்றும் திரையரங்கு வெளியீடு
இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான பிரவீன் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் இதில் நாயகனாக நடித்துள்ளதோடு, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிப்பையும் மேற்கொண்டார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'ஆர்யன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கிளைமாக்ஸ் மாற்றம் மற்றும் ஓடிடி வெளியீடு
திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் மாற்றி, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மீண்டும் படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 'ஆர்யன்' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஓடிடி தளத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகின்றது.
#Aaryan - thrilling your NETFLIX screens from 28th November!@TheVishnuVishal @VVStudioz @adamworx @selvaraghavan @ShraddhaSrinath @Maanasa_chou @GhibranVaibodha @dop_harish @Sanlokesh @silvastunt @PC_stunts @jayachandran46 @itshravanthi @prathool @Netflix_INSouth @SreshthMovies… pic.twitter.com/I2JRhlRKve
— Vishnu Vishal Studioz (@VVStudioz) November 22, 2025
LIVE 24 X 7









