சினிமா

GOAT: லியோ வரிசையில் இரண்டாவது நாளில் தடுமாறும் கோட்... விஜய்ண்ணா ரசிகர்கள் சோகம்!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இரண்டாவது நாளான இன்று கோட் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

GOAT: லியோ வரிசையில் இரண்டாவது நாளில் தடுமாறும் கோட்... விஜய்ண்ணா ரசிகர்கள் சோகம்!
GOAT Second Day Update

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படம் பக்கா கமர்சியல் ஜானரில் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். முதல் நாளில் பெரும்பாலும் விஜய் ரசிகர்களே கோட் படத்தை பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோட் FDFS முடிந்ததில் இருந்தே இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே வெளியாகின. வெங்கட் பிரபுவின் மேக்கிங், திரைக்கதை சூப்பர் என ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். அதேபோல், விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளும், டீ-ஏஜிங் லுக்கும் தாறுமாறு என தளபதி ஃபேன்ஸ் கொண்டாடி வந்தனர்.

தமிழ்நாட்டில் சிங்கிளாக களமிறங்கிய கோட், கேரளாவில் மட்டும் 700க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டுள்ளது. இதனால் இத்திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாளான நேற்று கோட் படத்துக்கு தரமான ஓபனிங் இருந்தும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 70 கோடியை கூட தொடவில்லை என சொல்லப்படுகிறது. விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி, மல்டி ஸ்டார்ஸ் மூவி என கோட் படத்துக்கு பெரிய ஹைப் இருந்தும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தடுமாறியுள்ளது. அதேநேரம் முதல் நாள் வசூல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று கோட் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் படத்தின் நீளம் ரொம்பவே அதிகம் என அதிருப்தி தெரிவித்துள்ள ரசிகர்கள், இரண்டாவது பாதியில் வெங்கட் பிரபு பொறுமையை சோதித்துவிட்டதாக புலம்பி வருகின்றனர். அதிலும் விஜய்யின் டீ-ஏஜிங் லுக், விஜயகாந்தின் ஏஐ வெர்ஷன் இரண்டும் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது. அதேபோல், இந்தப் படத்தில், ரஜினி, கமல், அஜித், சூர்யாவின் கங்குவா, கிரிக்கெட்டர் தோனி ஆகியோரின் ரெஃபரன்ஸ்களை வைத்துள்ளார் வெங்கட் பிரபு.

மேலும் படிக்க - 18 வயதில் செக்ஸ் அடிமை.. பிரபல நடிகை பகீர்

அதிலும் பெரிய சுவாரஸ்யங்கள் இல்லையென நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். முக்கியமாக விஜய்யின் டீ-ஏஜிங் லுக், கிராபிக்ஸ் காட்சிகள், மல்டி ஸ்டார்ஸ் ஆகியோர் மீது நம்பிக்கை வைத்த வெங்கட் பிரபு, கதை, திரைக்கதையை கவனிக்காமல் விட்டுவிட்டார். அதில் நம்பிக்கை வைத்திருந்தால் கோட் படம் நன்றாக வந்திருக்கும் எனக் கூறி வருகின்றனர். அதேபோல், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் விஜய் ரசிகர்களிடம் கடும் ஏமாற்றம் கொடுத்துள்ள்ளது.

ஏற்கனவே கோட் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிதாக ரீச் ஆகவில்லை. ஆனாலும் படத்தின் பின்னணி இசையில் யுவன் சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. கடைசியில் கோட் படத்தின் பின்னணி இசையிலும் யுவன் சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். முக்கியமாக கிளைமேக்ஸ் காட்சியில் யுவனின் பிஜிஎம் சுத்த வேஸ்ட் என்றும் கமென்ட்ஸ்கள் பறக்கின்றன. விஜய் ரசிகர்களை தவிர்த்து, மற்றவர்களிடம் கோட் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இரண்டாவது நாளான இன்று முதல் கோட் படத்துக்கான டிக்கெட் புக்கிங் குறைய தொடங்கியுள்ளதாம். முன்னதாக விஜய் நடிப்பில் ரிலீஸான லியோ படத்துக்கும் முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் லியோ தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.