சினிமா

சீமானால் வந்த சிக்கல்... பிரதீப்பின் LIK ரிலீஸாகுமா? விக்கிக்கு சோதனை மேல் சோதனை!

லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படம் மூலம் எப்படியாவது கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என நினைத்த விக்னேஷ் சிவன், தமிழகத்தின் வைரல் அண்ணன் சீமானை கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார்.

சீமானால் வந்த சிக்கல்... பிரதீப்பின் LIK ரிலீஸாகுமா? விக்கிக்கு சோதனை மேல் சோதனை!
சீமானால் வந்த சிக்கல்... பிரதீப்பின் LIK ரிலீஸாகுமா? விக்கிக்கு சோதனை மேல் சோதனை!
என்னதான் டைரக்டராக இருந்தாலும், முன்னாள் லேடி சூப்பர் ஸ்டா நயன்தாராவின் கணவர் என சொன்னால் தான் ரசிகர்களின் நினைவுக்கு வருகிறார் விக்னேஷ் சிவன். போடா போடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், அடுத்தடுத்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கினார். இதில், நானும் ரவுடி தான் படம் மட்டுமே விக்கியின் கெரியர் பெஸ்ட்டாக அமைந்தது. முக்கியமாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன், கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்டார். விக்கி சொன்ன கதை சொதப்பலாக இருந்தது தான், அஜித் அவரை ரிஜக்ட் செய்ய காரணம் என அப்போது சொல்லப்பட்டது.          
அதன்பிறகு விக்னேஷ் சிவனுக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையாமல் இருக்க, ஒருவழியாக LIK என்ற லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படத்தை தொடங்கினார். செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்தில், பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, க்ருத்தி ஷெட்டி, யோகி பாபு, மிஷ்கின் என ரகளையான கூட்டணியை களமிறக்கினார் விக்னேஷ் சிவன். இதெல்லாம் போதாது என ‘அண்ணன்’ சீமானையும் LIK கூட்டணியில் கொண்டுவந்தது தான், விக்கியை விக்கல் எடுக்க வைத்துள்ளது. ஒருகாலத்தில் பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் போன்ற படங்களை இயக்கி கெத்து காட்டியவர் சீமான்.
அதேபோல், மாயாண்டி குடும்பத்தார் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கிய சீமான், நாம் தமிழர் கட்சியை தொடங்கி தினம் தினம் ஏதாவது ஒரு சம்பவம் செய்து வருகிறார். இப்படி அரசியலில் சம்பவக்காரராக வலம் வரும் சீமானை, LIK படத்தில் கமிட் செய்த விக்கி, இதன்மூலம் பாசிட்டிவான ப்ரோமோஷன் கிடைக்கும் என நினைத்தார். ஆனால், இப்போதைய நிலையில் சீமான் இழுத்துவிடும் பஞ்சாயத்துகளை பார்த்தால், LIK படம் ரிலீஸாவதே கஷ்டம் என சொல்லப்படுகிறது. 
பெரியார் குறித்த சர்ச்சையாக பேசியது, பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு என, சீமானின் தலைக்கு மேல் டஜன் கணக்கில் கத்திகள் தொங்கியபடி இருக்கின்றன. இதுபோதாது என, LIK படத்தின் கதைபடி, ஹீரோவான பிரதீப்பும், அவருக்கு அப்பாவாக நடிக்கும் சீமானும், ஒரே பெண்ணை காதலிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கதையே, LIK படம் ரிலீஸான பின்னர் பஞ்சாயத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சீமான் வேறு ஏற்கனவே டிசைன் டிசைனாக வில்லங்கத்தை வரிசை கட்டி நிற்க வைத்துள்ளார். இதனால் இப்போதைக்கு LIK படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
லவ் டுடே, டிராகன் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் ஒருபக்கம், எப்படியாவது கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என ஏங்கிக்கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் இன்னொருபக்கம். இந்த ரெண்டு பேருக்கும் இப்போது ஆன்டி-வில்லனாக மாறியிருக்கிறார் சீமான். ஆகமொத்தம் லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனியின் நிலைமை தான் பரிதாபமாக காணப்படுகிறது.