சினிமா

கலவையான விமர்சனங்களை பெறும் 'காந்தா'.. முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று வெளியான 'காந்தா' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாயுள்ளது,

கலவையான விமர்சனங்களை பெறும் 'காந்தா'.. முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?
Kaantha Movie 1st Day Collection
துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள 'காந்தா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், முதல் நாளில் உலகளவில் ரூ.10.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

படத்தின் பின்னணி மற்றும் வசூல் நிலவரம்

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படும் 'காந்தா' திரைப்படம் சினிமாத் துறை பின்னணியில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, ராணா டகுபதி, பாக்கியஸ்ரீ போர்சே, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்தப் படம், முதல் நாளில் உலகளவில் ரூ.10.5 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

கலவையான விமர்சனம்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்துக்குக் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. துல்கர் சல்மானின் முந்தய படமான 'லக்கி பாஸ்கர்' வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த எதிர்பார்ப்பில் 'காந்தா' படத்துக்கு வந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும் திரைக்கதையில் சிறு தொய்வு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த விமர்சனங்கள் இருந்தபோதிலும், வார இறுதியில் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சினிமா வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.