சென்னை: தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தி கோட் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், விஜய்யின் கடைசி மூவி என்ன, இயக்குநர் யார் என்பதும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. விஜய் பிறந்தநாளில் கோட் அப்டேட்டுடன் தளபதி 69 பற்றிய தகவல்களும் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், இப்போது வரை அபிஸியலாக எந்த அப்டேட்டும் வரவில்லை.
இந்நிலையில், தளபதி 69 படத்தின் இயக்குநர், விஜய்யின் ஜோடி, இசையமைப்பாளர் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி இந்தப் படத்தை ஏற்கனவே வெளியான தகவல்படி, ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கமலின் 233வது படத்தை இயக்கவிருந்த ஹெச் வினோத், அதிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிகிறது. அப்போது விஜய்யை சந்தித்து பொலிட்டிக்கல் ஜானரில் ஒரு கதை கூறியிருந்தாராம் வினோத். அதுதான் தற்போது தளபதி 69 ஆக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும், இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகிவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தி கோட் ஷூட்டிங் முடிந்ததும் தளபதி 69 பற்றிய அபிஸியல் அப்டேட்டை வெளியிடவுள்ளதாம் படக்குழு. முக்கியமாக தளபதி 69 படத்தை கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், விஜய் பிறந்தநாள் தினத்தில் அவரது 69வது படத்தை தயாரிக்கவிருப்பதாக 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லீட் கொடுத்திருந்தது. இதனால் மாஸ்டர், லியோவை தொடர்ந்து தளபதி 69ல் மீண்டும் விஜய் - 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தாலும், விரைவில் தளபதி 69 அப்டேட் வர வேண்டும் என்றே விரும்புகின்றனர். முக்கியமாக விஜய்யுடன் சமந்தா நடிக்கவிருப்பதாக வெளியான தகவல்கள் தான் ரசிகர்களுக்கு மஜா அப்டேட்டாக அமைந்துள்ளது. ஏற்கனவே தெறி, கத்தி, மெர்சல் என மாஸ் காட்டிய இக்கூட்டணி, தளபதி 69 வழியாக மீண்டும் வைப் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.