சினிமா

விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
விடாமுயற்சி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் 'துணிவு’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன்,  ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர், ரம்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

எப்போது ஃபர்ஸ் லுக் வரும்? எப்போது இரண்டாவது லுக் வரும் என சமூக வலைதளத்தில் கேள்விகளாக கேட்டு வந்தனர். பின்னர் ஒரு வழியாக படக்குழு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்சியில் ஆழ்த்தியது படக்குழு. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க: அஜித்துடன் இணைந்த நடிகை ரம்யா.. வைரலாகும் போஸ்டர்

அதுமட்டுமல்லாமல், அஜித், திரிஷாவின் படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது. ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு\ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் நாளை (பிப். 6) உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நாளை 'விடாமுயற்சி' படத்தின் சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் நாளை மட்டும் திரையிட அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக பொங்கல் பண்டிகை அன்று ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் பொங்கல் அன்று இப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.