Actor Surya 44 Film Glimpse Video : கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா இன்று தனது 49வது பிறந்தநாளை(Surya Birthday) கொண்டாடுகிறார். இதனையடுத்து சூர்யா ரசிகர்களுக்காக அடுத்தடுத்து வெரைட்டியான அப்டேட்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதன்படி, நள்ளிரவு 12.12 மணிக்கு சூர்யா 44 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அதேபோல், சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதையும் படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது.
இதுதவிர சூர்யா 44 டைட்டில், ரிலீஸ் தேதி, சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் பற்றிய அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனால் சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சூர்யாவின் கிளிம்ப்ஸ் வீடியோவை மட்டும் ரிலீஸ் செய்துள்ள படக்குழு, விரைவில் டைட்டில் டீசர் ரிலீஸாகும் எனவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில் சூர்யாவின் லுக் படம் மீதான ஹைப்பை எகிற வைத்துள்ளது.
ராயல் எஸ்டேட் என்ற இடத்தில் ஒரு கேங் காத்திருக்க, உள்ளிருந்து பிளாக் & பிளாக் காஸ்ட்யூமில் மிரட்டலாக என்ட்ரியாகிறார் சூர்யா. ஒரு காதல், ஒரு சிரிப்பு, ஒரு போர் அதாவது A Love, A Laughter, A war இவையனைத்து இந்த ஒருவனுக்காக என்ற லீட் கொடுக்க, வாயில் சிகரெட்டுடன் என்ட்ரி கொடுக்கிறார் சூர்யா. வெளியே காத்திருக்கும் தனது கேங்ஸ்டர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கும் சூர்யா, கேமராவுக்கு க்ளோஸப்பாக நடந்து வந்து குறி வைப்பதாக முடிகிறது இந்த கிளிம்ப்ஸ். சூர்யாவின் ஹேர் ஸ்டைல், பிரெஞ்ச் பியர்ட் இந்த இரண்டும் வித்தியாசமாக உள்ளதாக ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.
சூர்யா 44 கிளிம்ப்ஸ் வீடியோவின் இறுதியில் விரைவில் டைட்டில் டீசர் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா 44 கிளிம்ப்ஸ் வீடியோ அந்தமான் பகுதியில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ்ஜின் படங்கள் பெரும்பாலும் டார்க் காமெடி ப்ளஸ் கேங்ஸ்டர் ஜானரில் இருக்கும். சூர்யா 44 திரைப்படமும் அதேபோல் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சூர்யாவுடன் கூட்டணி வைத்தார்.
இதன்மூலம் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சூப்பர் ஹிட் அடித்தது. ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்திருந்த இத்திரைப்படம், விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதன் காரணமாகவே கார்த்திக் சுப்புராஜ்ஜுக்கு சூர்யா உடனே கால்ஷீட் கொடுத்ததாக சொல்லப்பட்டது. அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக சூர்யா 44 படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சம்பவம் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
An unveiling maverick, ready to conquer