சினிமா

ராம் இன் லீலா: மீண்டும் லவ் ஸ்டோரியை தேர்ந்தெடுத்த ரியோ ராஜ்!

நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ராம் இன் லீலா: மீண்டும் லவ் ஸ்டோரியை தேர்ந்தெடுத்த ரியோ ராஜ்!
Rio Raj New Movie
அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் 2023-ல் வெளியான 'ஜோ' திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது நடிகர் ரியோ ராஜ் தனது அடுத்த புதிய படத்தைத் தொடங்கியுள்ளார். ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

ரியோ ராஜின் அடுத்த படமும் தொழில்நுட்பக் குழுவும்

ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு "ராம் இன் லீலா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் 6-வது திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இந்தப் படத்திலிருந்து ரியோ ராஜ் தன் பெயரைச் சுருக்கி 'ரியோ' என மாற்றியுள்ளார்.

முந்தைய வெற்றிகளும் படத்தின் எதிர்பார்ப்பும்

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த 'ஜோ' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்த 'ஆண் பாவம் பொல்லாதது' படமும் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப் படங்களாகின. 'ராம் லீலா'வின் போஸ்டரைப் பார்க்கும்போது, இப்படம் காதல் மற்றும் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.