சினிமா

புஷ்பா 2 -தி ரூல் ட்ரெயிலர் வெளியீடு... டேவிட் வார்னர், ராஜமெள்லி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து..

அல்லு அர்ஜூன்  மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா 2 -- தி ரூல் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில், எஸ்.எஸ். ராஜமெளலி, ரிஷப் ஷெட்டி ஆகியோர் எக்ஸ் தளத்தில் ட்ரெயிலருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புஷ்பா 2 -தி ரூல் ட்ரெயிலர் வெளியீடு... டேவிட் வார்னர், ராஜமெள்லி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து..

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான் புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். புஷ்பா படத்தில் நடித்தற்காக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 - தி ரூல் திரைபடத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிவடைந்தது. 

இந்நிலையில், பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழழை நடைபெற்ற ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட 'புஷ்பா 2' படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். ட்ரெயிலர் வெளீயீட்டு விழா, அரசியல் பொது கூட்ட நிகழ்ச்சி போன்று காட்சியளித்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ட்ரெயிலர் வெளியானதைத் தொடர்ந்து, பாகுபலி புகழ் எஸ்.எஸ். ராஜமெளலி மற்றும் ரிஷப் ரெட்டி, டேவிட் வார்னர் உள்ளிட்ட பிரபலங்கள், புஷ்பா 2: தி ரூல் டிரெய்லருக்கு தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர். 


படத்தின் டிரெய்லரைப் பற்றி எக்ஸ் தளத்தில், ​​'பார்ட்டிக்காக காத்திருக்க முடியாது' என்று இயக்குனர் ஏஸ். எஸ். ராஜமெளலி  தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புஷ்பா படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டும், மைதானத்தில் பாடலுக்கு நடனம் ஆடியது வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள டேவிட் வார்னர் அல்லு அர்ஜூனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரிஷப், புஷ்பா 2 டிரெய்லர் பிரமாண்டமாக உள்ளதாகவுன்ம்,  புஷ்பா 2 -வின் பிளாக்பஸ்டர் வெற்றி பெற ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.   மேலும் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் புஷ்பா 2 - தி ரூல் திரைப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.