மஹாவீர்யார் படத்தின் தோல்வியால் ரூ.95 லட்சம் வழங்குவதுடன், 'ஆக்ஷன் ஹீரோ பிஜு பார்ட் 2' படத்தைத் தயாரிக்க வாய்ப்பு வழங்குவதாக நிவின் பாலி உறுதியளித்திருந்ததாகத் தயாரிப்பாளர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்
நடிகர் நிவின் பாலி மீது மோசடிக்கு உறுதிப்பத்திரம் அளித்ததாகக் குற்றம்சாட்டி, போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டு வெளியான ‘மஹாவீர்யார்’ திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர் ப்ரியங்கர் வர்மா. இந்தப் படம் வணிகரீதியாக தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஏற்பட்ட நட்டத்துக்கான நிவாரணமாக ரூ.95 லட்சம் செலுத்துவதாகவும், மேலும், நிவின் பாலி நடித்த ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு – பாகம் 2’ திரைப்படத்தைத் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக எடுக்க அனுமதிக்க உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை ஆவணமாக உறுதி செய்தும், பின்னர் அந்தவாக்குறுதிகளைப் பூர்த்தி செய்யாததையடுத்து தயாரிப்பாளர், நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அப்ரித் ஷைனும் இணைந்து மோசடி செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்ற போலீசார், இந்த விவகாரத்தில் சட்டப்படி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தயாரிப்பாளரின் புகாரின் அடிப்படையில், நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைன் இருவருக்கும் எதிராக மோசடி மற்றும் வஞ்சனை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் நிவின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "இது தொடர்பான வழக்கு 28.06.2025 முதல் நீதிமன்ற நடுவர் குழு விசாரணையில் இருக்கிறது. இதில் ரகசியத் தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மதிக்காமல், அந்த வழக்கின்மேல் மேலும் ஒரு புதிய வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம். உண்மை கூடிய விரைவில் வெளிவரும்" என்று பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.