சினிமா

Coolie: ரஜினியுடன் கூட்டணி... முதல் தமிழ் மூவி... கூலியில் என்ட்ரியாகும் மஞ்சும்மல் பாய்ஸ் பிரபலம்?

Actor Rajinikanth Coolie Movie Update : சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மல்லுவுட் பிரபலம் ஒருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Coolie: ரஜினியுடன் கூட்டணி... முதல் தமிழ் மூவி... கூலியில் என்ட்ரியாகும் மஞ்சும்மல் பாய்ஸ் பிரபலம்?
Actor Rajinikanth Coolie Movie Update
Actor Rajinikanth Coolie Movie Update : வேட்டையனைத் தொடர்ந்து கூலி படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. விஜய், கமல்ஹாசன் வரிசையில் ரஜினியுடன் இணைந்துள்ள லோகேஷ், கூலி படத்தை தாறுமாறாக ஹிட் கொடுக்க வேண்டும் என தீயாக வேலை செய்து வருகிறாராம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கியது. அதில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன்பின்னர் அம்பானி இல்ல திருமண விழாவுக்காக மும்பை பறந்த ரஜினி, அங்கு டான்ஸ் ஆடி செம வைப் கொடுத்திருந்தார்.
 
அதன்பின்னர் சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார், மீண்டும் கூலி படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், கூலி படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் பற்றி படக்குழு இதுவரை அபிஸியலாக அறிவிக்கவில்லை. ஆனாலும், ஸ்ருதிஹாசனும் சத்யராஜ்ஜும் நடிப்பது மட்டும் உறுதி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் மேலும் சில முன்னணி நடிகர்கள் கூலி படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து லோகேஷ் தரப்பு இன்னும் அபிஸியலாக அறிவிக்காமல், ரொம்பவே சீக்ரெட்டாக வைத்துள்ளது. 
 
அதேநேரம் கூலி படத்தில் மலையாள ஹீரோ திலீப்குமார் நடிக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இது உண்மையா இல்லை வதந்தியா என்பது பற்றி இன்னும் அப்டேட் இல்லை. இந்த நிலையில் இன்னொரு மல்லுவுட் ஹீரோவும் ரஜினியின் கூலி படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் ஹீரோ, காமெடி, வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என வெரைட்டியாக நடித்து வருபவர் செளபின் சாஹிர்(Soubin Shahir). இந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்(Manjummel Boys) மெஹா ஹிட் அடித்தது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து கோலிவுட்டே மெர்சலாகிவிட்டது. விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டிய மஞ்சும்மல் பாய்ஸ்(Manjummel Boys) படத்தில் செளபின் சாஹிரின் நடிப்பும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இப்படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் கூலி படத்தில் செளபின் சாஹிரை ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் பிளான் செய்துள்ளாராம். 
 
கமல் நடித்த விக்ரம் படத்தில் ஃபஹத் பாசில், நரேன், விஜய்யின் லியோவில் மேத்யூ தாமஸ் என மல்லுவுட் பிரபலங்களுக்கு தனது படங்களில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் லோகேஷ். அதன்படி ரஜினியின் கூலி படத்திலும் இதே ஃபார்முலாவை கையில் எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. செளபின் சாஹிருக்கு போட்டோ ஷூட் நடந்த பின்னர் கூலி படத்தில் அவர் நடிப்பது கன்ஃபார்ம் ஆகிவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.