‘ROOT – Running Out Of Time’ என்கிற புதிய Sci-Fi கிரைம் த்ரில்லர் படத்தை சூர்யபிரதாப் எஸ் இயக்குகிறார். இவர் 'நாளைய இயக்குநர் – சீசன் 1' மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் என்பதுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார்.
படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. இவருடன் இணைந்து, பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'Stree', 'Helmet', 'Luka Chuppi' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான அபார்ஷக்தி குரானா, இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார். இதனால் 'ROOT' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கௌதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை பவ்யா த்ரிகா நடிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
இந்தத் திரைப்படத்தை தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷெய்க் முஜீப் ஆகியோர் Verus Productions நிறுவனம் வாயிலாக தயாரிக்கின்றனர். 'ROOT – Running Out Of Time' திரைப்படம் அறிவியல் கற்பனையையும், ஆழமான உணர்வுகளையும் பின்னிப் பிணைந்த ஒரு தனித்துவமான க்ரைம் த்ரில்லராக உருவாக உள்ளது.
இயக்குநர் சூர்யபிரதாப் எஸ் படம் குறித்து கூறுகையில், “'ROOT' கதை ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு முக்கியமான கனவுப் படம். ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த க்ரைம் த்ரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களோடு சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம். கௌதம் ராம் கார்த்திக், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து ஒரு காவல் அதிகாரியாக முழு ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
Verus Productions தயாரிப்பு நிறுவனம் சார்பில் படம் குறித்து கூறுகையில், “நாங்கள் தரமான, உணர்வுப்பூர்வமான படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் Verus Productions-ஐ தொடங்கினோம். 'ROOT' கதையை சூர்யபிரதாப் கூறியதும், இதுவரை இருந்த எல்லைகளை தாண்டும் விதத்தில் மிகத் தெளிவாக இருந்தது. கௌதமின் திரை ஆற்றல், அபார்ஷக்தியின் புதிய முயற்சி மற்றும் இயக்குநரின் தெளிவான காட்சித் திறமை — இவை அனைத்தும் சேர்ந்து, சினிமாத் துறையில் ஒரு புதிய தடம் பதிக்கும் என நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்கள்.
படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் குழு விவரம்:
--> ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா
-->எடிட்டிங்: ஜான் அபிரகாம்
-->இசை: வித்துனன்
-->தயாரிப்பு வடிவமைப்பு: பவ்னா கோவர்தன்
--> ஆக்ஷன்: மிரக்கிள் மைக்கேல்
--> VFX: சாந்தகுமார் (Hocus Pocus Studios)
-->ஆடை வடிவமைப்பு: தீப்தி ஆர்.ஜே
-->தயாரிப்பு மேலாளர்: தனலிங்கம்
-->தலைமை நிர்வாக அதிகாரி: Dr. ஆலிஸ் ஏஞ்சல்
--> PRO: ரேகா