சினிமா

சிம்புவுடன் ஜோடி சேர்ந்த ‘டிராகன்’ பட நடிகை.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிம்புவுடன் ஜோடி சேர்ந்த ‘டிராகன்’ பட நடிகை.. உற்சாகத்தில் ரசிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, சிம்புவின் 49-வது படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.டி.ஆர் 49’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இதனை தமிழ் புத்தாண்டு அன்று நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து அறிவித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சந்தானம் காமெடியனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்டேட்

இந்நிலையில், ’எஸ்.டி.ஆர்.49’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் ’டிராகன்’ பட நடிகை கயாடு லோஹர் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ‘எஸ்.டி.ஆர்.49’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர்.50’ திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர்.51’ படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.