தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நாக சைதன்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தண்டேல் திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. இவரது திரைப்பட வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும், இவரது திருமண வாழ்க்கை தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
2017ம் ஆண்டில் தென்னிந்தியாவின் டாப் நடிகை சமந்தாவை திருமணம் செய்துக்கொண்டார் நாக சைதன்யா. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கரியரை தொடர்வதுமட்டுமல்லாமல், அதில் வளர்ச்சியையும் கண்டார். இப்படி அனைத்தும் சரியாக போய்க்கொண்டிருக்க, சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையேயான காதல் கசந்து, 2021ம் ஆண்டில் அது விவாகரத்தில் முடிந்தது.
இவர்களின் பிரிவுக்கு, சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாகார்ஜுனாவின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை எனவும், சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோயும் தான் இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டது.
இதனையடுத்து சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா நடிகை ஷோபிதாவை காதலிக்க தொடங்கினார். இவர்களின் காதலுக்கு நாகார்ஜுனா அனுமதி கொடுக்க, அது திருமணமாக வளர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த வருடம் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோசில் திருமணம் செய்துக்கொண்டனர்.
இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, அப்போதிலிருந்து நாகசைத்தன்யாவையும், ஷோபிதாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில், ஷோபிதா தூலிபால குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் ஷோபிதா. இதனால், கவர்ச்சி படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ள அவர், தன்னிடம் கதையை கூற வரும் இயக்குநர்களிடம் நெருக்கமான காட்சிகள் இருந்தால் அதை ரிஜெக்ட் செய்துவிடுவதாக தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே கவர்ச்சியான காட்சிகளில் நடித்ததால் தான் சமந்தாவை நாகசைதன்யா பிரிந்ததாக பேசப்படும் நிலையில், அந்த பிரச்சனை தனக்கு வேண்டாம் என நினைத்து இந்த முடிவை ஷோபிதா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.