Director Mysskin Speech at Actor Soori Kottukkali Movie Press Meet : காமெடியனாக இருந்து ஹீரோ அவதாரம் எடுத்துள்ள சூரி, தற்போது கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். விடுதலை, கருடன் படங்களைத் தொடர்ந்து கொட்டுக்காளியும் சூரியின் கேரியரில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட கொட்டுக்காளி, மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் கோலிவுட்டிலும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் கொட்டுக்காளி ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாலாஜி சக்திவேல், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது கொட்டுக்காளி படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சூரியின் நடிப்பை பாராட்டிய இயக்குநர் மிஷ்கின், கொட்டுக்காளி படத்தின் ப்ரோமோஷனுக்காக இங்கேயே அவுத்துப் போட்டு நிர்வாணமா டான்ஸ் ஆட ரெடி என்றார். அப்படியாவது இந்தப் படத்துக்கு ப்ரோமோஷன் வேண்டும் என்பதாக மிஷ்கின் பேசியது ரசிகர்களுக்கு ஷாக்கிங்காக அமைந்துள்ளது.
அதாவது கொட்டுக்காளி படம் பார்த்த பின்னர், அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் என்னால் வெளியே வர முடியவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு பட பூஜை விழாவில் இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ்ஜை சந்தித்தேன். அப்போது கூழாங்கல் படத்தை முடித்துவிட்டு அடுத்த ப்ராஜெக்ட் ஆரம்பித்துவிட்டேன் என்றார். யார் இசையமைப்பாளர் என கேட்டதற்கு, யாரும் கிடையாது என பிஎஸ் வினோத்ராஜ் கூறினார். எனக்கு அதை கேட்டதும், “யார்ரா இவன் பெரிய டேஷ் மாதிரி பேசுறான்” என இருந்தது. ஆனால், கொட்டுக்காளி படம் மூலம் வினோத்ராஜ் என்னை செருப்பால் அடித்துவிட்டான் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய மிஷ்கின், இளையராஜா காலில் விழுந்து முத்தமிட்டுள்ளேன். அதன்பிறகு பிஎஸ் வினோத்ராஜ் காலை முத்தமிட தயாராக இருக்கிறேன் என்றார். அதோடு இந்தப் படத்தை ப்ரோமோஷன் செய்ய நிர்வாணமாக இங்கே டான்ஸ் ஆட ரெடி எனக் கூறி அதிர வைத்தார். மிஷ்கினின் இந்த வீடியோ வைரலாக, நெட்டிசன்களோ அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர். “மிஷ்கின் என்ன பைத்தியமாவே ஆகிட்டாரா.... மிஷ்கின் நிர்வாணமா டான்ஸ் ஆடினா யாருய்யா அவர பார்க்க முடியும்... நாளாக நாளாக மிஷ்கின் பேச்சில் முதிர்ச்சி இல்லை என விதவிதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க- சூரியின் கொட்டுக்காளி ட்ரெய்லர் வெளியானது!
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன், பிசாசு போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ள மிஷ்கின், இப்போது நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். விஜய்யுடன் லியோ, சிவகார்த்திகேயனின் மாவீரன் படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் டெவில், லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி ஆகிய படங்களிலும் மிஷ்கின் லீடிங் கேரக்டரில் நடித்து வருகிறார்.
“நான் நிர்வாணமாக ஆட தயார்”- மிஷ்கின்#kumudamnews24x7 | #kumudam | #kumudamnews | #KottukkaaliFromAug23 #Kottukaali #KottukkaaliTrailer #Soori #AnnaBen #PSVinothraj #Sivakarthikeyan #myskkin @Siva_Kartikeyan @DirectorMysskin @sooriofficial #tamilcinema #CinemaUpdate pic.twitter.com/CcP5lwYTt6
— KumudamNews (@kumudamNews24x7) August 13, 2024