கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த 2022ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் மூலம் ரிஷப் ஷெட்டிக்கு இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
காந்தாரா 2 படப்பிடிப்பு
கன்னடத்தில் கே.ஜி.எஃப் படத்திற்கு பிறகு அதிக வசூலித்த படம் என்ற பெயரை காந்தாரா பெற்றது. இதன் இரண்டாம் பாகம் காந்தாரா சாப்டர் 1 என்கிற டைட்டலுடன் தயாராகி வருகிறது.
பெங்களூரில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் கல்ந்து கொண்டு நடித்து வந்த மலையாள திரையுலைகைச் சேர்ந்த துணை நடிகரான கலாபவன் நிஜு என்பவர் படப்பிடிப்பின்போது மாரடைப்பால் காலமானார். துணை நடிகர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தங்கி இருந்த திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அடுத்தடுத்து உயிரிழப்புகள்
இதேபோல கேரளாவை சேர்ந்த கபில் என்ற துணை நடிகர் ஒருவர் இந்த படத்தின் கலந்து கொண்டு நடித்தபோது, ஓய்வு நேரத்தில் கொல்லூரில் உள்ள சவுபர்ணிகா ஆற்றில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து ஒன்னொருவர் படப்பிடிப்பில் உயிரிழந்தது என அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்தது காந்தாரா படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகா, மாஸ்திகட்டே அருகே உள்ள மாணி அணையில் படகில் வைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது.
படகு கவிழ்ந்து விபத்து
ரிஷப் ஷெட்டி நடிக்க துணை நடிகர்கள் கேமரா குழுவினர் என 30 பேர் படகில் இருந்தனர். படப்பிடிப்பு நடந்த பகுதியில் ஆழம் இல்லாத பகுதி என கூறப்படுகிறது . இந்த நிலையில் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட அனைவரும் அணை நீரில் தத்தளித்தனர். அவர்களில் நீச்சல் தெரிந்தவர்கள் கரை வந்து சேர்ந்தனர். மற்றவர்களை அங்கு தயார் நிலையில் இருந்த மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தினால் பல லட்சம் மதிப்பிலான கேமராக்கள், படப்பிடிப்பு கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கி போனது. இருப்பினும் நல்வாய்பாக விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ரிஷப் ஷெட்டிக்கு நோட்டீஸ்
விபத்து குறித்து அறிந்த போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து விளக்கம் அளிக்க நடிகரும்,இயக்குநருமான ரிஷப் ஷெட்டிக்கு சிவமொக்கா மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். காந்தாரா படப்பிடிப்பில் அடுத்தடுத்த சம்பவங்களால் படக்குழுவினர் மேலும் அதிர்ச்சியில் உள்ளனர்.

LIVE 24 X 7