சினிமா

23 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயான நடிகை ஸ்ரீலீலா.. வாழ்த்தும் ரசிகர்கள்

நடிகை ஸ்ரீலீலா தனது 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நிலையில் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

23 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயான நடிகை ஸ்ரீலீலா.. வாழ்த்தும் ரசிகர்கள்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா கடந்த 2019-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிஸ்’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். என்னதான் கன்னடத்தில் அறிமுகமானாலும் இவர் தெலுங்கில் தான் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மருத்துவ படிப்பை முடித்த நடிகை ஸ்ரீலீலா, நடனம் மற்றும் நடிப்பில் இருந்த அதீத ஆர்வம் காரணமாக திரைத்துறைக்குள் நுழைந்தார். இவர் நடித்த ‘குண்டூர் காரம்’, ‘பகவந்த் கேசரி’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக வலம் வரும் ஸ்ரீலீலா கடந்த 2022-ஆம் ஆண்டு இரண்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து தனது 21 வயதில் தாயானார்.

ஸ்ரீலீலா பதிவு

இந்நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “இதயத்தின் மீதான படையெடுப்புக்கு வீட்டிற்குள் மற்றொருவர்” என குறிப்பிட்டுள்ளார். நடிகை ஸ்ரீலீலாவின் இந்த செயலுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.








View this post on Instagram

















A post shared by Sreeleela (@sreeleela14)