Actor Vijay Goat Movie 3rd Single Promo Video : விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து விசில் போடு, சின்ன சின்ன கண்கள் என இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டன. இதனையடுத்து கோட் மூன்றாவது பாடலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருந்தனர். இதுகுறித்து கடந்த 3 தினங்களாக அப்டேட் மேல் அப்டேட் கொடுத்து வந்த படக்குழு, தற்போது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
முதல் சிங்கிளான விசில் போடு பாடல், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் கூட்டணியில் வெளியானது. அடுத்து விஜய் – சினேகா நடிப்பில் ஃபேமிலி சென்டிமென்டல் மெலடியாக சின்ன சின்ன கண்கள் பாடலை படக்குழு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக வெளியாகும் கோட் மூன்றாவது சிங்கிளில், விஜய்யுடன் த்ரிஷா டான்ஸ் ஆடியுள்ளதாகவும், இது செமையான குத்துப் பாடல் எனவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல், இப்பாடலை அனிருத், ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாகவும் அப்டேட்கள் வந்தன. ஆனால், தற்போது வெளியான ப்ரோமோவில் இது எதுவுமே உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.
அதன்படி, கோட் மூன்றாவது சிங்கிள் ப்ரோமோ வீடியோ ‘ஸ்பார்க்’ என்ற டைட்டிலில் வெளியாகியுள்ளது. மேலும் இப்பாடலை யுவன் பாடியுள்ளதோடு, இதில் விஜய்யுடன் மீனாட்சி செளத்ரி நடனம் ஆடியுள்ளதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேநேரம் கோட் மூன்றாவது பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவை பார்க்கும் போது, இப்பாடல் கிட்டத்தட்ட குத்துப் பாடல் ஸ்டைலில் இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், விஜய்யின் கெட்டப்பும் ரொம்பவே இளமையாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க - மழை பிடிக்காத மனிதன் இயக்குநர் விஜய் மில்டன் ஷாக்!
நாளை (ஆக.3) மாலை 6 மணிக்கு வெளியாகும் கோட் படத்தின் ஸ்பார்க் சாங், ரசிகர்களுக்கு வைப் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கோட் மூன்றாவது பாடலைத் தொடர்ந்து விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 24 அல்லது 25ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கோட் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, அஜ்மல், யோகி பாபு, ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், லைலா உள்ளிட்ட மேலும் பலர் நடித்து வருகின்றனர்.