இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர் என்ற பன்முதக் தன்மை கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ’ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்களில் இடம் பிடித்துக் கொண்டார்.
இவர் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் ‘சிக்கந்தர்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். மேலும், காஜல் அகர்வால், சத்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் மந்தமான வசூலையும் செய்தது. மேலும், ‘சிக்கந்தர்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததாகவும் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ‘சிக்கந்தர்’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
சினிமா
‘சிக்கந்தர்’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? படக்குழு அறிவிப்பு
சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.