சென்னை: டோலிவுட் முன்னணி நடிகரான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. சமந்தாவை காதல் திருமணம் செய்த நாக சைதன்யா, சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்துப் பெற்று பிரிந்தார். இதற்கான காரணம் என்னவென்பதை நாக சைதன்யா, சமந்தா என இரு தரப்பினரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபலாவுடன் இருந்த உறவு தான் காரணம் என சமந்தா தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகின.
அதேபோல், திருமணத்திற்குப் பின்னரும் சமந்தா நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். சில படங்களில் அவர் கவர்ச்சியாகவும் நடித்திருந்தது தான் இந்த விவகாரத்துக்கு காரணம் என, நாக சைதன்யா தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இந்த விவாகரத்து பற்றி இருதரப்பினரும் முறையாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. விவகாரத்துக்குப் பின்னர் சோபிதா துலிபலா உடன் நாக சைதன்யா அடிக்கடி டேட்டிங் சென்று வந்தார். அப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியிருந்தன.
இந்நிலையில், நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபலாவுக்கும் இன்று நிச்சயம் நடக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஆனாலும் இது உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது. இதற்கெல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா. தனது டிவிட்டர் பக்கத்தில் நாக சைதன்யா, சோபிதா துலிபலா இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டதாக புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். இன்று காலை 9.42 மணிக்கு எனது மகனுக்கும் சோபிதா துலிபலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
மேலும் படிக்க - ஃபஹத் பாசில் நெட்வொர்த்
சோபிதா துலிபலாவை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதேபோல், இருவருக்கும் எனது வாழ்த்துகள், இன்று முதல் புதிய தொடக்கம் என்பதாக பதிவிட்டுள்ளார். அதோடு நாக சைதன்யா – சோபிதா துலிபலா இருவரும் நிச்சயதார்த்தத்தில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இன்னொரு புகைப்படத்தில் நாக சைதன்யா – சோபிதா துலிபலா ஆகியோருடன் நாகர்ஜுனாவும் உள்ளார். நாக சைதன்யா – சோபிதா துலிபலா நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இருவருக்கும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை மிக பிரம்மாண்டமாக நடத்தவும் நகார்ஜுனா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளார்களாம். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்து பிரபலமான சோபிதா, பாலிவுட்டிலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நைட் மேனேஜர் என்ற இந்தி வெப் சீரிஸில் சோபிதா துலிபலா படுகவர்ச்சியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பா நாகர்ஜுனா ஸ்டைலில் நாக சைதன்யாவும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளார். முக்கியமாக சமந்தா தனக்கு லவ் புரோபோஸ் செய்த அதே ஆகஸ்ட் 8ம் தேதி, சோபிதா துலிபலாவுடன் நிச்சயம் செய்துள்ளார் நாக சைதன்யா.
நாக சைதன்யாவிற்கும், சோபிதாவிற்கும் நிச்சயதார்த்தம் #kumudamnews24x7 | #kumudamnews | #kumudam | #NagaChaitanya | #SobhitaDhulipala | #Nagarjuna | #Encagement | @chay_akkineni | @sobhitaD | @iamnagarjuna pic.twitter.com/g2xNWu1E0w
— KumudamNews (@kumudamNews24x7) August 8, 2024